தேசிய விருது வாங்கிய ஜி.வி. பிரகாஷிற்கு, ஏ.ஆர். ரகுமான் கொடுத்த விலையுயர்ந்த பரிசு... போட்டோ இதோ
ஜி.வி.பிரகாஷ்
ஜி.வி.பிரகாஷ், ஒரு நடிகராக அவர் மீது கலவையான விமர்சனங்கள் இருந்தாலும் இசையமைப்பாளராக மக்களை ரசிக்க வைத்த வண்ணம் உள்ளார்.
கடந்த 2006ம் ஆண்டு வெயில் படத்தின் மூலம் இசையமைப்பாளராக களமிறங்கியவர் குட் பேட் அக்லி (2025) வரை தனது இசையின் மூலம் டிரெண்டிங் இசையமைப்பாளராக வலம் வருகிறார்.
சமீபத்தில் இவரது சொந்த வாழ்க்கையில் ஒரு விஷயமும், திரை வாழ்க்கையில் நல்ல விஷயமும் நடந்துள்ளது.
பரிசு
சமீபத்தில் நடந்த 71வது தேசிய திரைப்பட விருதுகளில் வாத்தி படத்திற்காக 2வது முறையாக விருது வாங்கியுள்ளார் ஜி.வி.பிரகாஷ்.
முதலில் சூரரைப் போற்று படத்திற்காக தனது முதல் தேசிய விருதை பெற்றார். 2 முறை தேசிய விருது பெற்ற ஜி.வி.பிரகாஷிற்காக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஒரு பரிசு கொடுத்துள்ளார்.
அதாவது அவர் பயன்படுத்திய வெள்ளை நிற Pianoவை ஜி.வி.க்கு பரிசாக கொடுத்துள்ளாராம். போட்டோவுடன் ஜி.வி.பிரகாஷ் இதனை அறிவித்துள்ளார்.