உங்க மனைவிக்கு தமிழ் தெரியாதா, கஸ்தூரி கேட்ட கேள்வி- ஏ.ஆர்.ரகுமான் கொடுத்த சூப்பர் பதில்
ஏ.ஆர்.ரகுமான்
சென்னையில் நடந்த ஒரு விருது விழாவில் ஏ.ஆர். ரகுமான் தனது மனைவி சாய்ரா பானுவுடன் கலந்துகொண்டார்.
ஏ.ஆர்.ரகுமான் சில விஷயங்களை மேடையில் பேசியபோது அவரது மனைவியையும் பேச கேட்டுள்ளனர்.
இதனால் சாய்ரா பானு பேச ஆரம்பிக்கும் போது, இந்தியில் வேண்டாம், தமிழில் பேசுமாறு ஏ.ஆர்.ரகுமான் தனது மனைவியிடம் கூற அந்த வீடியோ ரசிகர்களிடம் வைரலானது.
கஸ்தூரிக்கு வந்த பதில்
அந்த வீடியோவை பார்த்த நடிகை கஸ்தூரி என்னது ரஹ்மான் மனைவிக்கு தமிழ் வராதா, அவங்க தாய் மொழி என்ன, வீட்டில் குடும்பத்தில் என்ன பேசுவாங்க என டுவிட் செய்தார்.
அதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் காதலுக்கு மரியாதை என டுவிட் செய்துள்ளார்.
காதலுக்கு மரியாதை?? https://t.co/8tip3P6Rwx
— A.R.Rahman (@arrahman) April 27, 2023
பிரம்மாண்டமான பொன்னியின் செல்வன் 2 படம் எப்படி உள்ளது?- Live Updates

Post office -ன் இந்த 5 சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்தால் FD-யை விட அதிக வட்டியைப் பெறலாம் News Lankasri
