இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.. அடேங்கப்பா இத்தனை கோடியா
ஏ.ஆர்.ரஹ்மான்
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஆஸ்கார் விருதை பெற்று இந்தியாவுக்கே பெருமை தேடி தந்தவர். மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தை வைத்து இருக்கும் அவரது பாடல்கள் பெரிய அளவில் கொண்டாடப்படுகின்றன.
இவர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘ரோஜா’ திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின் இவர் இசையமைப்பில் வெளியான பாடல்கள் அனைத்தும் மாபெரும் வெற்றி அடைந்தது.

குறிப்பாக அவரது காதல் பாடல்கள் பெரிய அளவில் வரவேற்பை பெறுகின்றன. இந்நிலையில் ஏ.ஆர்.ரஹ்மானின் மனைவி சாயிரா தான் 29 வருட திருமண வாழ்க்கையை முறித்துக்கொள்வதாக அறிவித்து இருக்கிறார்.
சொத்து மதிப்பு
இது ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில், ஏ.ஆர்.ரஹ்மானின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, இவருடைய சொத்து ரூ.1,728 கோடி இருப்பதாக கூறப்படுகிறது.

இவருக்கு சென்னை கோடம்பாக்கத்தில் ஒரு ஆடம்பரமான பங்களா மற்றும் ஏராளமான இசை ஸ்டுடியோக்களையும், மெர்சிடிஸ் பென்ஸ் மற்றும் ஜாகுவார் போன்ற விலை உயர்ந்த கார்களையும் வைத்திருக்கிறார். இதன் மூலம், உலகின் பணக்கார இசைக்கலைஞர்களில் ஒருவராக ரஹ்மான் வலம் வருகிறார்.
எங்கள் நாட்டுக்கு வராதீர்கள்... சுற்றுலாப்பயணிகளுக்கு எதிராக நாடொன்றில் வெடித்த கலவரம் News Lankasri
தேர்வு சீர்திருத்தங்களுக்கு நந்தன் நிலேகனி தலைமையில் உயர்மட்டக் குழு: பிரதமர் மோடி அறிவிப்பு IBC Tamilnadu
அமைதி பேச்சுவார்த்தைக்கு வழிவிட்ட டிரம்ப்: ஈரான் - அமெரிக்கா இடையே தற்காலிக தாக்குதல் நிறுத்தம் News Lankasri