தெலுங்கு மக்கள் தமிழர்களை எதிரியாக பார்க்கிறார்களா? RRR பற்றி ஏ.ஆர்.ரஹ்மானின் ட்வீட்

By Parthiban.A Jan 26, 2023 02:50 PM GMT
Report

ஆஸ்கார் நாமினேஷனில் RRR.

ராஜமௌலி இயக்கிய ஆர்ஆர்ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடல் தற்போது ஆஸ்கார் இறுதி நாமினேஷனில் இடம்பெற்று இருக்கிறது. சிறந்த பாடலுக்கான பிரிவில் அந்த பாடல் இடம்பெற்று இருப்பதற்கு பலரும் வாழ்த்து கூறி இருக்கின்றனர்.

ஏற்கனவே ஆஸ்கார் வென்று இருக்கும் இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் ட்விட்டரில் RRR படத்திற்கு வாழ்த்து கூறி இருந்தார்.

தெலுங்கு மக்கள் தமிழர்களை எதிரியாக பார்க்கிறார்களா? RRR பற்றி ஏ.ஆர்.ரஹ்மானின் ட்வீட் | Ar Rahman On Andhra People And Rrr

ஆந்திர மக்கள் தமிழர்களை வெறுக்கிறார்களா?

ஏ.ஆர்.ரஹ்மானின் டீவீட்டுக்கு பதில் அளித்த ஒரு நெட்டிசன் "ஆந்திர மக்கள் தமிழர்களை வெறுக்கிறார்கள். ஆனால் நாம் எதிரிகளை நேசிக்கிறோம்" என ட்விட் செய்து இருக்கிறார்.

அந்த பதிவுக்கு பதில் அளித்த ஏ.ஆர்.ரஹ்மான் "நாமெல்லாம் ஒரே குடும்பம். நமக்கு கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் நாம் எப்போதும் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருக்க வேண்டும்" என கூறி இருக்கிறார். 

ஐஸ்வர்யா ராய்க்கு இதுதான் தாய்மொழியா? மொத்தம் இத்தனை மொழிகள் தெரியுமா 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US