29 வருட குடும்ப வாழ்க்கை பிரிவில் முடிந்தது ஏன்?.. ஓபனாக பேசிய ஏ.ஆர். ரகுமான்
ஏ.ஆர். ரகுமான்
இந்திய சினிமாவின் இசை உலகில் தனக்கென ஒரு இடம் பிடித்தவர் ஏ.ஆர்.ரகுமான்.
இளையராஜா என்ற இசைச் ஜாம்பவான் ராஜ்ஜியம் செய்த காலத்தில் தனித்துவமான இசைக்கொண்டு மக்களின் கவனத்தை தன் பக்கம் விழ வைத்தவர்.

எல்லா இசையமைப்பாளர்களை போல வெற்றிப் பாடல்களை மட்டும் கொடுக்காமல் அதில் என்ன வித்தியாசம் காட்டலாம், தொழில்நுட்பத்தில் என்ன மாற்றம் காட்டலாம் என முயற்சி செய்து ஜெயித்தவர்.
உலகில் உள்ள பல இசைக் கருவிகளை பற்றி தெரிந்துகொண்டு அதையும் தனது இசையில் பயன்படுத்தி சாதனை செய்துகொண்டிருக்கிறார்.
இசை ராஜாவாக வலம்வரும் ஏ.ஆர்.ரகுமான் சொந்த வாழ்க்கை குறித்தும் நிறைய செய்திகள் வந்தது.

பிரபலம் பேட்டி
ஏ.ஆர்.ரகுமான், தனது மனைவி சாய்ரா பானுவுடன் 29 ஆண்டுகள் வாழ்ந்து 3 பிள்ளைகளையும் பெற்றுள்ளார். அவரது மகனும், மகளும் கூட இசைத்துறையில் தங்கள் நிரூபித்து வருகிறார்கள்.

கடந்த ஆண்டு ஏ.ஆர்.ரகுமான் தனது மனைவி சாய்ரா பானுவை விவாகரத்து செய்வதாக அறிவித்தார், இது எல்லோருக்கும் ஷாக்கிங் செய்தியாக அமைந்தது.
இந்த நிலையில் தனது குடும்ப வாழ்க்கை, விவாகரத்து குறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசியுள்ளார் ஏ.ஆர்.ரகுமான்.
சீரியல் நடிகர் வெற்றி வசந்த், வைஷு வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகத்தில் குடும்பம், பிரபலம் பதிவு
அதில் அவர், இந்த முடிவு எளிதாக எடுக்கப்பட்டதல்ல, அது வாழ்க்கையில் நீண்ட காலமாகப் படிந்து வந்த அழுத்தங்களின் விளைவாக ஏற்பட்டது.

குடும்பத்துடன் நேரம் செலவிட முடியாத ஒரு சூழல் தான் அதிகம் இருந்துள்ளது. இப்படி நிறைய காரணங்களே வாழ்க்கையில் நடந்த விஷத்திற்கு காரணமாக இருக்கிறது என கூறியுள்ளார்.
அதோடு தனது 3 குழந்தைகளும் தற்போது சாய்ரா பானுவுடன்தான் வசித்து வருகிறார்கள் என்பதையும் கூறி இருக்கிறார்.
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan
புலம்பெயர்ந்தோருக்கு வேலை கிடையாது... பிள்ளைகளுக்கு பள்ளிகளில் இடம் கிடையாது: ஒரு திடுக் செய்தி News Lankasri