ஏ.ஆர் ரஹ்மான் - சாயிரா திருமணம் எப்படி நடந்தது தெரியுமா! காதல் திருமணம் இல்லை
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஆஸ்கார் வேண்டும் இந்தியாவுக்கே பெருமை தேடி தந்தவர். மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தை வைத்து இருக்கும் அவரது பாடல்கள் பெரிய அளவில் கொண்டாடப்படுகின்றன.
குறிப்பாக அவரது காதல் பாடல்கள் பெரிய அளவில் வரவேற்பை பெறுகின்றன.
இந்நிலையில் ஏ.ஆர்.ரஹ்மானின் மனைவி சாயிரா தான் 29 வருட திருமண வாழ்க்கையை முறித்துக்கொள்வதாக அறிவித்து இருக்கிறார். இது ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
திருமணம் நடந்தது எப்படி
1995ல் தான் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் சாயிரா திருமணம் நடைபெற்றது. காதல் பாடல்களுக்கு பெயர் பெற்ற ரஹ்மான் காதலித்து எல்லாம் திருமணம் செய்யவில்லை, 'எனக்கு ஒரு பொண்ணு பாருங்க' என அவரது அம்மாவிடம் கூறி இருக்கிறார். அவர் பார்த்து ஏற்பாடு செய்தது தான் இந்த திருமணம்.
ரஹ்மானுக்கு அப்போது 29 வயது, அதனால் இது தான் சரியான நேரம் என அவர் முடிவு எடுத்தாராம். அப்போது ரோஜா, பம்பாய் அவர் இசையமைப்பில் பாடல்கள் பெரிய ஹிட் ஆகி இருந்த நேரம் அது.
காதலிக்க நேரமில்லை..
ஒரு பெண்ணை தேடி காதலித்து திருமணம் செய்து கொள்ள எல்லாம் எனக்கு நேரம் இல்லை, அதனால் தான் அம்மாவிடம் அப்படி கூறினேன் என ரஹ்மானே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
எப்படிப்பட்ட பெண் வேண்டும் என அம்மா கேட்டபோது 'சிம்பிளான, எனக்கு எந்த பிரச்சனையும் கொடுக்காத ஒரு பெண் வேண்டும். அப்போது தான் நான் மியூசிக் போட முடியும்' என ரஹ்மான் கூறினாராம்.
ரஹ்மானின் அம்மா ஒரு தர்காவின் அருகில் தான் சாயிராவின் சகோதரியை சந்தித்து இருக்கிறார். அவர்கள் பேசி திருமணத்திற்கு ஏற்பாடு செய்து இருக்கின்றனர்.
ரஹ்மான் சாயிராவை முதலில் பார்த்தபோது 'திருமணம் செய்து கொள்ள விருப்பமா, இல்லை வேறு எதாவது மனதில் இருக்கிறதா' என ஒரே ஒரு கேள்வியை தான் கேட்டாராம். அவர் சரி என சொன்னபிறகு குடும்பத்தினர் ஏற்பாட்டில் திருமணம் நடந்து முடிந்து இருக்கிறது.
29 வருடம் தொடர்ந்த அவர்களது திருமண வாழ்க்கை, தற்போது விவாகரத்து மூலம் முடிவுக்கு வந்து இருக்கிறது.

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu

நடிகை விஜயலட்சுமிக்கு 7 முறை கருக்கலைப்பு; பணம் பெற்ற சீமான் - வெளியான நீதிமன்றம் தீர்ப்பு IBC Tamilnadu
