மதம் மாறும் போது எனக்கு எந்த அழுத்தமும் இல்லை, ஆனால்..ஏ.ஆர்.ரஹ்மான் பேட்டி
ஏ.ஆர்.ரஹ்மான்
இந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர் திகழ்பவர் ஏ.ஆர்.ரஹ்மான். இவர் டாப் ஹீரோக்கள் படங்களில் இசையமைத்து வருகிறார்.
சமீபத்தில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் வெளியான மாமன்னன் படத்திற்கு இசையமைத்திருந்தார். இப்படத்தில் இடம்பெற்ற பாடல்களுக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்தனர்.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ஏ.ஆர்.ரஹ்மான் பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.அதில் அவர் "நான் இஸ்லாமிய மதத்திற்கு மாறும் போது எந்த ஒரு விதமான சமூக அழுத்தத்தையும் நான் எதிர்கொள்ளவில்லை".
“இந்தியர்கள், குறிப்பாக தென்னிந்தியர்கள் அனைவரும் அரவணைத்து வாழும் தன்மை கொண்டவர்கள். அவர்கள் வாலு வாழவிடு என்ற கோட்பாட்டின்படி சந்தோஷமாக வாழ்ந்து வருபவர்கள். ஆனால் அரசியல் சூழல் காரணங்களால் சில ஆண்டுகள், நாட்டில் வித்தியாசமான சூழல் நடந்து வருகிறது” என்று கூறியுள்ளார்.
அந்த பிரபலத்தை காதலிக்கும் காயத்ரி ஷங்கர்!.. உறுதிப்படுத்தும் நட்பு வட்டாரங்கள்