பிரபல முன்னணி நடிகரிடம் சூப்பர்ஹிட் பாடலை எழுத சொல்லிய ஏ.ஆர். ரஹ்மான்.. யார் அந்த நடிகர் தெரியுமா
ஏ.ஆர். ரஹ்மான்
உலகளவில் பிரபலமான இசையமைப்பாளர்களில் ஒருவர் இசை புயல் ஏ.ஆர். ரஹ்மான். இவர் இசையில் கடந்து ஆண்டு வெளிவந்த பொன்னியின் செல்வன், கோப்ரா, வெந்து தணிந்தது காடு உள்ளிட்ட பல படங்களின் ஆல்பம் ஹிட்டாகியுள்ளது.
அடுத்ததாக இவர் கைவசம் பத்து தல, PS2, மாமன்னன், லால் சலாம் ஆகிய படங்கள் உள்ளன. கடந்த 2013ஆம் ஆண்டு ஏ.ஆர். ரஹ்மான் இசையில் வெளிவந்த திரைப்படம் மரியான்.
பாடல் எழுதியது இவரா
இப்படத்தில் இடம்பெற்ற ஒரு முக்கியமான பாடல் தான் 'கடல் ராசா நான்'. இந்த பாடலை யுவன் சங்கர் ராஜா பாடியிருப்பார். ஆனால், இந்த பாடலுக்கு வரிகள் எழுதியவர் யார் என்று பலருக்கும் தெரிந்திருக்காது.
இந்த பாடலை எழுதியது நடிகர் தனுஷ் தானாம். ஆம், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் தான் தனுஷை இந்த பாடலை எழுது கூறினாராம். அதன்பின் தான் தனுஷ் இந்த பாடலை எழுதியதாக தகவல் கூறப்படுகிறது.
அம்பானியின் பல கோடி ஆஃபரை தூக்கி எறிந்த ரஜினிகாந்த்.. காரணம் என்ன தெரியுமா

அமெரிக்காவில் தோசையால் புகழ்பெற்ற இலங்கை தமிழர்! கனடா, ஜப்பானிலும் ரசிகர்கள்..யார் அவர்? News Lankasri
