நஸ்ரினுக்கு மேடையிலேயே சர்ப்ரைஸ் கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மான்.. சூப்பர் சிங்கரில் யாரும் எதிர்பார்க்காத ஒன்று
சூப்பர் சிங்கர் ஜூனியர் 10ம் சீசன் நேற்று நடைபெற்றது. அதில் காயத்ரி டைட்டில் ஜெயித்தார். இரண்டாவது இடத்தை நஸ்ரின் பெற்றதாக அறிவிக்கப்பட்டது. நஸ்ரினுக்கு 5 லட்சம் ரூபாய் பரிசு கிடைத்தது.
காயத்ரிக்கு டைட்டில் என கமல் கையை பிடித்து அறிவித்ததில் இருந்தே நஸ்ரின் கண்ணீருடன் தான் இருந்தார். அவரை டி.இமான் தான் ஆறுதல் படுத்தி கொண்டிருந்தார்.
அதன் பின் மேடையில் அவர் கண்ணீர் விட்டு அழுவதை பார்த்து அது ஆனந்த கண்ணீரா அல்லது சோக கண்ணீரா என தொகுப்பாளர் பிரியங்கா கேட்டார். ஆனால் அதற்கும் அவர் பதில் அளிக்கவில்லை.
ரஹ்மான் கொடுத்த பரிசு
மேடையில் அப்போது ரஹ்மான் அவருக்கு ஒரு சர்ப்ரைஸ் கொடுத்தார். தனது மியூசிக் ஸ்கூலில் சேர்ந்துகொள்கிறாயா என அவர் கேட்டார்.
அதற்கு நஸ்ரின் உடனே ஓகே என தலையாட்டினார்.

பாக்., சீனாவுக்கு கவலையளிக்கும் செய்தி - Tejas MK1 போர் விமானங்களை மேம்படுத்தும் இந்தியா News Lankasri
