முதல் படமே ஹிட் கொடுத்த இயக்குனருடன் கைகோர்க்கும் ஏ.ஆர். ரஹ்மான்.. ஹீரோ இந்த நடிகரின் மகன் தான்
ஏ.ஆர். ரஹ்மான்
உலகளவில் பிரபலமான இசையமைப்பாளர்களில் ஒருவர் ஏ.ஆர். ரஹ்மான். இவர் இசையில் சமீபத்தில் மாமன்னன் திரைப்படம் வெளிவந்தது.
அடுத்ததாக அயலான், லால் சலாம், கமல் ஹாசன் 234 ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதை தொடர்ந்து புதிதாக ஒரு படத்தை கமிட் செய்துள்ளார்.
புதிய கூட்டணி
டாடா படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் இயக்குனர் கணேஷ் கே. பாபு. தனது முதல் படத்திலேயே ஹிட் கொடுத்த இயக்குனர் கணேஷ் கே. பாபு இயக்கத்தில் அடுத்ததாக உருவாகவுள்ள திரைப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கவுள்ளார்.
இப்படத்தின் ஹீரோவாக துருவ் விக்ரம் கமிட் ஆகியுள்ளார். ஏற்கனவே துருவ் விக்ரம் நடிப்பில் வர்மா, மகான் ஆகிய படங்கள் வெளிவந்தது. இப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
எதிர்நீச்சல் சீரியல் நடிகர், நடிகைகளின் சம்பளம் விவரம்.. முழு லிஸ்ட் இதோ

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
