இணையத்தில் செம்ம வைரலான அரண்மனை 3 சிங்கிள், ராஷி கண்ணா செம்ம டான்ஸ்
சுந்தர்.சி இயக்கத்தில் அரண்மனை படத்தின் மூன்றாம் பாகம் ரெடியாகிவிட்டது. இப்படத்தில் ஆர்யா, ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, யோகிபாபு, மறைந்த நடிகர் விவேக் என பலரும் நடித்துள்ளனர்.
இப்படத்தின் கடந்த இரண்டு பாகங்களும் மெகா ஹிட் ஆனதால், கண்டிப்பாக இந்த படத்தின் மீதும் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்து வருகின்றது.
கண்டிப்பாக இந்த படம் பல குடும்பத்தினரை திரையரங்கிற்கு கொண்டு வரும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.
இந்நிலையில் தற்போது சத்யா இசையில் இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் தற்போது வெளிவந்துள்ளது.
இந்த பாடல் தான் இணையத்தையே அதிர வைத்து வருகின்றது, குறிப்பாக ராஷிகண்ணாவின் நடனம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது, அதோடு இந்தியளவில் ட்ரெண்டிங்கில் உள்ளது, மேலும், 1 மில்லியன் ஹிட்ஸை கடந்து சாதனை படைத்து வருகின்றது, இதோ..