நாளுக்கு நாள் அதிகரிக்கும் அரண்மனை 4 வசூல்.. இதுவரை எவ்வளவு தெரியுமா
அரண்மனை 4
தமிழ் சினிமாவில் 2024ஆம் ஆண்டின் முக்கிய திரைப்படமாக மாறியுள்ளது அரண்மனை 4. வேற்று மொழி திரைப்படங்கள் வசூலை அள்ளிக்கொண்டு இருந்த சமயத்தில் அரண்மனை 4 திரைப்படத்தின் மூலம் மாபெரும் வெற்றியை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார்.
வழக்கமான கதைக்களத்தை தவிர்த்து சற்று வித்தியசமான திரைக்கதையை இப்படத்தில் அமைத்திருந்தார் சுந்தர் சி. அதுவே இப்படத்தின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது. தமன்னா நடிப்பும் மக்களை அதிகளவில் கவர்ந்தது.
வசூல் சாதனை
முதல் நாளில் இருந்து உலகளவில் வசூலை வாரி குவித்துக்கொண்டு இருக்கும் அரண்மனை 4 திரைப்படம் இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் வெளிவந்து 6 நாட்களை கடந்துள்ள நிலையில், உலகளவில் ரூ. 40 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.
இந்த வார இறுதிக்குள் கண்டிப்பாக ரூ. 50 கோடி வசூலை கடந்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைக்கும் என திரை வட்டாரத்தில் உறுதியாக கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri
