வசூலை வாரி குவிக்கும் அரண்மனை 4.. இதுவரை எவ்வளவு தெரியுமா
அரண்மனை 4
சுந்தர் சி இயக்கி நடித்து கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் அரண்மனை 4. இப்படத்தில் தமன்னா மற்றும் ராஷி கன்னா கதாநாயகிகளாக நடித்திருந்தனர். மேலும் நகைச்சுவை கதாபாத்திரங்களில் யோகி பாபு, கோவை சரளா, விடிவி கணேஷ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஹிப் ஹாப் ஆதி இசையமைத்திருந்தார்.
மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று முதல் நாளில் இருந்து வசூலில் பட்டையை கிளப்பி வரும் அரண்மனை 4 திரைப்படம் இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
வசூல் விவரம் இதோ
அதன்படி, அரண்மனை 4 கடந்த நான்கு நாட்களில் ரூ. 30 கோடிக்கும் மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்துள்ளது.
வெள்ளிக்கிழமை வெளிவரும் திரைப்படங்கள் வார இறுதியான சனிக்கிழமை மற்றும் ஞாயிற்று கிழமை வரை தான் வசூலில் நல்ல வரவேற்பை பெரும், அடுத்த வாரம் திங்கள் கிழமையில் இருந்து சற்று வசூல் குறையும். ஆனால் அரண்மனை 4 திரைப்படத்திற்கு அப்படி நடக்கவில்லை என தகவல் கூறுகின்றனர்.
கடந்த வாரம் வெளிவந்த இப்படம் நேற்று கூட மக்கள் மத்தியில் நல்ல வசூலை வாரி குவித்துள்ளது என தெரியவந்துள்ளது. இதுவே அரண்மனை 4க்கு கிடைத்துள்ள மாபெரும் வெற்றியாக பார்க்கப்படுகிறது என்கின்றனர்.

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
