100 கோடியை தொடுமா அரண்மனை 4.. இதுவரை செய்துள்ள வசூல் விவரம் இதோ
அரண்மனை 4
கடந்த மே 3ஆம் தேதி வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்துள்ள திரைப்படம் அரண்மனை 4. சுந்தர் சி இயக்கி நடித்திருந்த இப்படத்தில் அவருடன் இணைந்து தமன்னா, ராஷி கன்னா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
முதன் முதலில் இப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்கவிருந்த நிலையில், திடீரென அவர் வெளியேறியதால் அவருக்கு பதிலாக அந்த கதாபாத்திரத்தில் சுந்தர் சி-யே நடிக்க முடிவு செய்தார்.

மக்களிடையே முதல் நாளில் இருந்து நல்ல வரவேற்பை பெற்று வரும் அரண்மனை 4 திரைப்படத்தின் இதுவரையிலான வசூல் குறித்து விவரம் வெளியாகியுள்ளது.
பாக்ஸ் ஆபிஸ்
அதன்படி, இப்படம் இதுவரை உலகளவில் ரூ. 80 கோடி வரை வசூல் செய்துள்ளதாம். 10 நாட்களுக்குள் உலகளவில் ரூ. 50 கோடியை கடந்த அரண்மனை 4, தற்போது 18 நாட்களில் ரூ. 80 கோடியை நெருங்கியுள்ளது.

விரைவில் இப்படம் ரூ. 100 கோடி வசூல் செய்தாலும் ஆச்சிரியப்படுவதற்கு இல்லை என திரை வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.
உலக நாடுகள் மீது டிரம்ப் விதித்த வரி விதிப்பு ரத்து: அமெரிக்க உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு News Lankasri
ஐரோப்பாவின் ஐந்து பெரிய பாதுகாப்பு சக்திகள்... கூட்டாக வான் பாதுகாப்பு அமைப்பை உருவாக்க திட்டம் News Lankasri
பெண்களுடன் பக்கிங்ஹாம் அரண்மனையில் ஆண்ட்ரூ... புகாரளித்த அதிகாரியை மிரட்டிய லண்டன் பொலிசார் News Lankasri