உலகளவில் வசூல் வேட்டையில் அரண்மனை 4.. இதுவரை எவ்வளவு தெரியுமா
அரண்மனை 4
சமீபத்தில் வெளிவந்து உலகளவில் வசூலில் பட்டையை கிளப்பிக்கொண்டிருக்கும் திரைப்படம் அரண்மனை 4. சுந்தர் சி இயக்கி நடித்திருந்த இப்படத்தில் தமன்னா, ராஷி கன்னா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

ஹிப் ஹாப் ஆதி இசையில் உருவான இப்படம் முதல் நாளில் இருந்தே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தது. 10 நாட்களுக்குள் உலகளவில் ரூ. 50 கோடி வரை வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் சாதனையும் படைத்தது.
வசூல்
அரண்மனை 4 திரைப்படம் 2 வாரங்களை கடந்து வெற்றிகரமாக திரையரங்கில் நிலையில், இதுவரை எவ்வளவு வசூல் வந்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, உலகளவில் இப்படம் ரூ. 72 கோடி வரை வசூல் செய்துள்ளது. அதே போல் தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 50 கோடியை கடந்துள்ளது என தெரியவந்துள்ளது. இது அரண்மனை 4 திரைப்படத்திற்கு கிடைத்துள்ள மாபெரும் வெற்றியாக பார்க்கப்படுகிறது.
பிரான்சில் வார இறுதியில் மீண்டும் போராட்டங்கள்: காவல்துறைக்கு ஆதரவாக களமிறங்கும் ராணுவம் News Lankasri
20ஆம் ஆண்டு திருமணக் கொண்டாட்டத்தில் சூர்யாவின் வித்தியாசமான ஸ்டைல்! பின்னணி என்ன தெரியுமா? Manithan