அழகான கருப்பு நிற புதிய காரை வாங்கியுள்ள அரண்மனை 4 பட நடிகை... யாரு பாருங்க, போட்டோஸ் இதோ

Yathrika
in பிரபலங்கள்Report this article
தேவ நந்தா
குழந்தை நட்சத்திரமாக ஒரு மொழியில் அறிமுகமாகி பிரபலமானவர்கள் அடுத்தடுத்து பல மொழிகளில் நடிக்க தொடங்கிவிடுகிறார்கள்.
அப்படி கடந்த 2019ம் ஆண்டு தோட்டப்பன் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி மை சாண்டா, மின்னல் முரளி, ஹெவன், தி டீச்சர் போன்ற படங்களில் நடித்தவர் தேவ நந்தா.
தமிழ், தெலுங்கு, மலையாளம் என பிஸியாக 5 வருடங்களாக நடித்து வரும் இவர் சமீபத்தில் பாக்ஸ் ஆபிஸில் பட்டய கிளப்பிய அரண்மனை 4 படத்தில் நடிகை தமன்னாவின் மகளாக நடித்து அசத்தியிருந்தார்.
தெலுங்கில் பாக் என்கிற திரைப்படத்திலும் மலையாளத்தில் கு என்கிற திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.
புதிய கார்
9 வயதாகும் தேவ நந்தா இப்போது கருப்பு நிறத்தில் இருக்கும் இனோவா ஹைகிராஸ் காரை வாங்கியுள்ளார். ஷோரூமிற்கு தனது குடும்பத்துடன் சென்று புதிய காரை வாங்கியுள்ளார்.
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை அவர் வெளியிட ரசிகர்கள் தேவ நந்தாவிற்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.