அரண்மனை 4 திரைவிமர்சனம்

Report

அரண்மனை என்பது தமிழ் சினிமாவில் முக்கியமான பிராண்ட்-ஆக மாறிவிட்டது. இந்த தலைப்பில் இதுவரை வெளிவந்த மூன்று பாகங்களும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து இன்று உலகளவில் அரண்மனை 4 திரைப்படம் வெளியாகியுள்ளது.

அரண்மனை 4 திரைவிமர்சனம் | Aranmanai 4 Movie Review

சுந்தர் சி இயக்கி நடித்து, தமன்னா, ராஷி கன்னா, யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடிக்க ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார். வாங்க படம் எப்படி இருக்கிறது என்று விமர்சனத்தில் பார்க்கலாம்.

கதைக்களம்

சுந்தர் சி-யின் தங்கையான தமன்னா தனது வீட்டின் சம்மதம் இல்லாமல் காதலித்து திருமணம் செய்துகொள்ளவதால், பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

10 வருடங்கள் கடந்த நிலையில் கணவர், மகன், மகளுடன் அரண்மனையில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் தமன்னா வாழ்க்கை தலைகீழாக மாறுகிறது. தமன்னாவும் அவரது கணவரும் திடீரென இறந்து போக, இந்த செய்தி சுந்தர் சி-க்கு தெரிய வருகிறது.

அரண்மனை 4 திரைவிமர்சனம் | Aranmanai 4 Movie Review

தங்கையின் மரண செய்தியை கேட்டு ஊருக்கு வரும் சுந்தர் சி, தனது தங்கையின் மரணத்தில் ஏதோ மர்மம் இருக்கிறது என உணர்கிறார்.

தமன்னாவின் மரணத்திற்கு பின் அந்த ஊரில் என்னென்ன விஷயங்கள் நடந்தது, இதன் பின்னணி என்ன என்பதே படத்தின் மீதி கதை.

படத்தை பற்றிய அலசல்

சுந்தர் சி-யின் நடிப்பு வலுவாக இல்லை என்றாலும், இயக்குனராக பட்டையை கிளப்பி விட்டார். வழக்கமான ரிவெஞ் கதையை வைத்து போர் அடிக்காமல், Baak எனும் ஒரு புதிய விஷயத்தை வைத்து கதையை மாற்றி அமைத்து, திரைக்கதையை சுவாரஸ்யம் ஆக்கியுள்ளார்.

ஏற்கனவே பார்த்த சில விஷயங்கள் படத்தில் இருந்தாலும் கூட, அது ரசிக்கும் படியாக இருக்கிறது. தேவையில்லாத சில நகைச்சுவை காட்சிகள் திரைக்கதையில் தொய்வை ஏற்படுத்துகிறது. ஆனால், ப்ரீ கிளைமாக்ஸ் காட்சியில் வரும் நகைச்சுவை அட்டகாசம்.

அரண்மனை 4 திரைவிமர்சனம் | Aranmanai 4 Movie Review

சுந்தர்.சியின் அரண்மனை 4 எப்படி உள்ளது, திகில் கிளப்பியதா? Live Updates

சுந்தர்.சியின் அரண்மனை 4 எப்படி உள்ளது, திகில் கிளப்பியதா? Live Updates

சில லாஜிக் மிஸ்டேக், அதை சரி செய்திருந்தால் இன்னும் கூட படம் வலுவாக இருந்திருக்கும். திகில் காட்சிகளை பக்காவாக வடிவமைத்த விதம் படத்தின் பிளஸ் பாயிண்ட்.  மொத்த படத்தையும் தனது தோளில் தாங்கி நிற்கிறார் தமன்னா. எமோஷனல் காட்சிகளில் அனைவரையும் கவர்ந்து விட்டார்.

சுந்தர் சி படம் என்றாலே கிளாமர் இருக்கும் என விமர்சனத்தை இப்படத்தில் தகர்த்துள்ளார். தமன்னா அளவிற்கு ராஷி கன்னாவிற்கு ஸ்கோப் இல்லை என்றாலும் கூட, தனக்கு கிடைத்த கதாபாத்திரத்தில் கச்சிதமாக நடித்துள்ளார் நடிகை ராஷி.

அரண்மனை 4 திரைவிமர்சனம் | Aranmanai 4 Movie Review

நகைச்சுவை காட்சிகள் சில இடங்களில் தொய்வை ஏற்படுத்தினாலும், கோவை சரளா, யோகி பாபு, விடிவி கணேஷ் ஆகியோரின் நடிப்பு பக்கா. படத்தின் மிகப்பெரிய பலம் பின்னணி இசை தான். ஹிப் ஹாப் ஆதி அதில் வெறித்தனமாக ஸ்கோர் செய்துள்ளார். VFX படத்திற்கு பலம் சேர்க்கிறது.

அதே போல் படத்தை பிரமாண்டமாக காட்டிய ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங் இரண்டுமே சூப்பர். குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சி, சுந்தர் சி பாணியில் மிரட்டலாக இருந்தது. சிம்ரன், குஷ்பூவின் நடனம் ஒரு பக்கமும், வில்லன் - ஹீரோவுக்கு இடையே உள்ள மோதலும் வேற லெவல். மேலும் அதற்காக போடப்பட்ட செட் மிகவும் பிரம்மாண்டம்.   

பிளஸ் பாயிண்ட்

தமன்னாவின் நடிப்பு.

திரைக்கதை.

ஹிப் ஹாப் ஆதியின் பின்னணி இசை.

திகில் காட்சிகள்.

ப்ரீ கிளைமாக்ஸ் காட்சிகள்.

மைனஸ் பாயிண்ட்

தேவையில்லாத சில நகைச்சுவை காட்சிகள், அதனால் எற்படும் தொய்வு.

மொத்தத்தில் அரண்மனை 4, சுந்தர் சி-யின் வெற்றி மகுடத்தில் மற்றும் ஒரு ரத்தினம்.. 

அரண்மனை 4 திரைவிமர்சனம் | Aranmanai 4 Movie Review

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US