அடுத்த 100 கோடி வசூல் படம் ரெடி.. அரண்மனை 5 குறித்து வெளிவந்த தகவல்
அரண்மனை 4
2024ஆம் ஆண்டு தமிழ் சினிமாவின் முதல் ரூ. 100 கோடி வசூல் படமாக அரண்மனை 4 அமைந்தது. சுந்தர் சி இயக்கி நடித்து வெளிவந்த இப்படத்தில் தமன்னா, ராஷி கண்ணா உள்ளிட்டோர் அவருடன் இணைந்து நடித்திருந்தனர்.
அரண்மனை படங்களின் அடுத்தடுத்த பாகங்கள் வெளிவந்தாலே, ரசிகர்கள் வைக்கும் ஒரே விமர்சனம், படம் ஒரே மாதிரி இருக்கிறது என்று தான்.
அதனை அரண்மனை 4 படத்தில் மாற்றி, வழக்கமான கதைக்களத்தை வைத்து திரைக்கதையை அமைக்காமல், வித்தியாசமாக இப்படத்தை சுந்தர் சி கையாண்ட விதம் படத்திற்கு நல்ல வரவேற்பை ஏற்படுத்தி தந்தது.
அரண்மனை 5
பாக்ஸ் ஆபிஸில் ரூ. 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்த நிலையில், அரண்மனை 5 எப்போது என ரசிகர்கள் கேட்டு வந்தனர். இந்த நிலையில், அரண்மனை 5 குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
ஆம், அரண்மனை 5 படத்திற்காக வேலைகள் துவங்கிவிட்டதாகவும், அடுத்த ஆண்டு கோடை காலத்தில் வெளிவரும் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் இப்படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
