அரண்மனை 5 குறித்து வெளிவந்த தகவல் பொய்யானது.. நடிகை குஷ்பு வெளியிட்ட அதிர்ச்சி பதிவு
அரண்மனை
சுந்தர் சி இயக்கி நடித்து வெளிவந்த திரைப்படம் அரண்மனை 4 இப்படத்தில் இவருடன் இணைந்து தமன்னா, ராஷி கண்ணா உள்ளிட்ட முன்னணி நடிகைகள் நடித்திருந்தனர்.
2024 - ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் ரூ. 100 கோடி வசூல் செய்த முதல் படமாக அரண்மனை 4 அமைந்தது. அரண்மனை படங்களின் அடுத்தடுத்த பாகங்கள் வெளிவந்தாலே, ரசிகர்கள் வைக்கும் ஒரே விமர்சனம், படம் ஒரே மாதிரி இருக்கிறது என்று தான்.
அதனால் அரண்மனை 4 - ம் பாகத்தில் வழக்கமான கதைக்களத்தை வைத்து திரைக்கதையை அமைக்காமல், வித்தியாசமாக இப்படத்தை சுந்தர் சி கையாண்டார்.
அதனால், இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அரண்மனை 4 படத்தின் வெற்றியை தொடர்ந்து, இந்த படத்தின் 5 - ம் பாகம் எப்போது என ரசிகர்கள் கேட்டு வந்தனர்.
குஷ்பு பதிவு
இந்நிலையில், நேற்று அரண்மனை 5 குறித்து ஒரு தகவல் வெளியானது. அதாவது, அரண்மனை 5 படத்திற்கான வேலைகள் துவங்கிவிட்டதாகவும், அடுத்த ஆண்டு கோடை காலத்தில் வெளிவரும் என்றும் ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைக்கிறார் எனவும் தகவல் வெளியானது.
தற்போது, அரண்மனை 5 குறித்து வெளியான தகவல் பொய்யானது என கூறி நடிகை குஷ்பு சுந்தர் அவரது இன்ஸ்டா பக்கதில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
அதில், "அரண்மனை 5 படம் குறித்து பொய்யான தகவல் பரவி வருகிறது அதிகாரப்பூர்வ தகவல் இயக்குனர் மூலம் அல்லது தயாரிப்பாளர் மூலம் தான் வெளிவரும் அதுவரை சற்று பொறுமையாக இருங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

கழுத்தில் தாலி ஏறிவுடன் மொத்தமாக மாறிய சீதா.. வாழ்க்கை இழந்த மீனா- பரிதவிப்பில் குடும்பத்தினர் Manithan
