அரண்மனை 3 படப்பிடிப்பில் நடந்த சம்பவம்.. வெளியான சுவாரஸ்ய தகவல்
சுந்தர்.சி இயக்கத்தில் ஆர்யா, ராஷிகன்னா, ஆண்ட்ரியா, விவேக் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் அரண்மனை 3.
அவ்னி சினிமேக்ஸ் நிறுவனம் சார்பில் குஷ்பு தயாரித்திருக்கும் இப்படத்தை உதயநிதி ஸ்டாலின், ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் மூலம் வெளியிடுகிறார்.
இப்படம் வருகிற அக்டோபர் 14ஆம் தேதி ஆயுத பூஜையன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்நிலையில், அரண்மனை 3 படத்திற்காக 12 அடி உயர லிங்கம் சிலை ஒன்றை செட் போட்டு படமாக்கி உள்ளனர்.
அதனை நாம் டிரைலரில் பார்த்தோம். ஷூட்டிங்கிற்காக போடப்பட்ட செட்டை உண்மையான லிங்கம் சிலை என்று நினைத்து பொதுமக்கள் கூட்டமாக வந்து சாமி தரிசனம் செய்தார்களாம்.
இதன் காரணமாக சில நாட்கள் ஷூட்டிங்கைத் தொடங்குவதில் தாமதம் ஆனதாக தகவல் தெரிவிக்கின்றனர்.

16 வயது சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை - அரசு அதிகாரி, தொழிலதிபர் உள்ளிட்ட 10 பேர் கொடுமை! IBC Tamilnadu

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
