வீடியோவால் கொந்தளித்த அறந்தாங்கி நிஷா.. என்ன ஆனது?
அறந்தாங்கி நிஷா விஜய் டிவியில் முக்கிய காமெடியன்களில் ஒருவர். பிக் பாஸ் உள்ளிட்ட ஷோக்களில் பங்கேற்ற அவர் பட்டிமன்ற பேச்சாளராகவும் இருந்து வருகிறார்.
அறந்தாங்கி நிஷா சமீபத்தில் சென்னையில் சொந்தமாக வீடு வாங்கி செட்டில் ஆகி இருக்கிறார். அதன் புகைப்படங்களையும் அவர் வெளியிட்டு இருந்தார்.
கொந்தளித்த நிஷா
ஒரு அரசு பள்ளியில் சத்துணவு முட்டை கேட்டதற்காக 5ம் வகுப்பு மாணவனை சத்துணவு பணியாளர் துடைப்பத்தால் விரட்டி விரட்டி அடிக்கும் வீடியோ வைரலாகி இருக்கிறது. அதை பதிவிட்டு நிஷா கோபமாக பேசி இருக்கிறார்.
"ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி சத்துணவு முட்டை கேட்டதற்கு 5 ம் வகுப்பு மாணவன் சத்துணவு ஊழியர்களால் தக்காப்பட்டது மிகவும் கண்டனத்திற்குரியது , ஆசிரியர்கள் அடிப்பது மாணவன் நல்வழிக்காக, இவர்கள் எப்படி மாணவன் மீது கைவைக்க முடியும், யார் கொடுத்த உரிமை, மரியாதைக்குரிய பள்ளி கல்வி துறை அமைச்சர் திரு அன்பில் மகேஷ் அவர்கள் அந்த பணியாளர்களை பணி நீக்கம் மட்டும் அல்ல உரிய தண்டனை வழங்க வேண்டும்" என அவர் கூறி இருக்கிறார்.