மன அழுத்தத்தால் சிகிச்சை, எல்லா கெட்ட வார்த்தைகளிளும் திட்னாங்க: கண்ணீர் விட்ட அறந்தாங்கி நிஷா
விஜய் டிவி நடிகை அறந்தாங்கி நிஷா இன்றைய நீயா நானா ஷோவில் பங்கேற்றார். அதில் அவர் ஒரு விஷயத்தை கண்ணீருடன் கூறி இருக்கிறார்.
பெண் பிரபலங்கள் மற்றும் அவர்களது கணவர்கள் இடையே தான் இன்றைய நீயா நானா விவாதம் இருந்தது. அப்போது நிஷா பிக் பாஸ் வீட்டுக்குள் சென்று வந்த பிறகு மன ரீதியாக பாதிக்கப்பட்டதாக அவரது கணவர் கூறினார்.
ஒரு கேள்வி கேட்டால் அதற்கு பதில் வரவே ஒரு 20 நிமிடங்கள் ஆகிவிடும். அந்த அளவுக்கு இருந்தார். அவரை மருத்துவமனை கூட்டி சென்று சகஜ நிலைக்கு கொண்டு வரவே 30 நாட்களுக்கும் மேல் ஆகிவிட்டது.
அது பற்றி பேசிய நிஷா "எல்லா கெட்ட வார்த்தைகளிலும் திட்னாங்க, இனி திட்டவேண்டும் என்றால் புது வார்த்தைகள் தான் கண்டுபிடிக்க வேண்டும். அந்த அளவுக்கு திட்னாங்க. ஆண்களை திட்ட வேண்டும் என்றால் உடல் பற்றி திட்டுவதில்லை. ஆனால் பெண்களை பற்றி உடலை குறிப்பிட்டு தான் திட்டுகிறார்கள்" என கண்ணீர் விட்டார்.
அனிருத்தை திருமணம் செய்துகொள்வேன்.. இளம் பின்னணி பாடகியின் முடிவு