பாரதி கண்ணம்மா சீரியலில் அறந்தாங்கி நிஷா நடிக்கிறாரா?- வெளிவந்த கலாட்டாவான வீடியோ
பாரதி கண்ணம்மா ரசிகர்கள் பல நாள் எதிர்ப்பார்த்திருந்த காட்சிகள் இப்போது ஒளிபரப்பாகிறது என்றே கூறலாம்.
பல வருடங்களாக பிரிந்து இருக்கும் பாரதி-கண்ணம்மா எப்போது இணைவார்கள் என்ற கேள்வி ரசிகர்களிடம் இருந்தது, நீதிமன்ற உத்தரவை மதிக்க வேண்டும் என பாரதி கண்ணம்மா வீட்டிற்கு சென்றுள்ளார்.
இருவரும் செய்யும் அட்டகாசங்கள் எல்லாம் பார்க்கவே அழகாக இருந்து வருகிறது.
அடுத்தடுத்து என்ன நடக்கும், வெண்பா வந்தால் என்ன நடக்கும் என ரசிகர்களே பல காட்சிகளை வடிவமைத்து பார்த்து வருகிறார்கள்.
இந்த நிலையில் தான் சீரியல் குறித்து ஓரு சூப்பர் தகவல் வந்துள்ளது. அது என்னவென்றால் பாரதி கண்ணம்மா சீரியலில் புதிய வேடத்தில் நடிக்க வந்துள்ளார் அறந்தாங்கி நிஷா.
சீரியல் படப்பிடிப்பில் குழந்தை நட்சத்திரம் ஹேமாவுடன் அவர் செய்துள்ள டப்ஷ்மேஷ் வீடியோ வெளியாகியுள்ளது.