பிக்பாஸ் புகழ் சின்னத்திரை பிரபலம் அறந்தாங்கி நிஷா போட்ட எமோஷ்னல் பதிவு- ஏன் தெரியுமா?
அறந்தாங்கி நிஷா
கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் தனது தனித்துவமான காமெடியை வெளிப்படுத்தி ஆண் போட்டியாளர்களுடன் சமமாக போட்டி போட்டு வென்றவர் தான் அறந்தாங்கி நிஷா.
அந்நிகழ்ச்சி இவருக்கு கொடுத்த பிரபலம் சீரியல், நிறைய மேடை நிகழ்ச்சிகள், வெளியூர் சென்று நிகழ்ச்சிகளில் பங்குகொள்வது, பிக்பாஸ், படங்கள் என தொடர்ந்து தனது திரைத்துறையில் வளர்ந்துகொண்டே இருந்தார்.
இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவரும் சொந்தமாக ஒரு யூடியூப் பக்கம் திறந்து அதில் வீடியோக்கள் பதிவிட்ட வண்ணம் இருக்கிறார்.
எமோஷ்னல் பதிவு
இந்த நிலையில் அறந்தாங்கி நிஷா நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் நாளை வெளியாகவுள்ள ஜெயிலர் படத்தில் நடித்துள்ளாராம். இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது குறித்து எமோஷ்னல் பதிவு ஒன்று போட்டுள்ளார்.
அதில் அவர், ரொம்ப நன்றி நெல்சன் சார். இந்த இடத்துல என்னுடைய பெயர் இருக்கிறது பார்க்கிறதுக்கு எனக்கு ரொம்பவே சந்தோஷமா இருக்கு.
அறந்தாங்கியில் இருந்து நான் திரை உலகத்துக்கு போகும் போது என்னை நம்புன என்னுடைய நண்பர்களுக்கும், என் குடும்பத்துக்கும் நன்றி.
எனக்கு எப்பவுமே என்னுடைய ஊர் பிடிக்கும். இந்த இடத்தில் அறந்தாங்கி நிஷா என்று பார்க்கும்போது சந்தோஷமா இருக்கு என பெரிய பதிவு போட்டுள்ளார்.
இதோ பாருங்கள்,
யாருமே எதிர்ப்பார்க்காத விஷயத்தை செய்யப்போகும் லியோ படக்குழு- விஜய் திரைப்பயணத்திலேயே முதல்முறை

பிரித்தானியாவின் பாரிய இஸ்லாமிய கல்லறையை கட்டும் கோடீஸ்வர சகோதரர்கள்! எதிர்ப்பால் பின்னடைவு News Lankasri
