வெயிலை பொருட்படுத்தாமல் வயதான நபர் செய்த வேலை- அறந்தாங்கி நிஷா வெளியிட்ட வீடியோ
அறந்தாங்கி நிஷா
சின்னத்திரையில் பெண் காமெடி நடிகைகள் சிலரே தான் உள்ளனர்.
அதில் மக்களால் அதிகம் கொண்டாடப்பட்ட ஒரு நடிகை தான் அறந்தாங்கி நிஷா.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் ஆண் போட்டியாளர்களுக்கு மத்தியில் தனது திறமையால் ஜொலித்தவர் தான் அறந்தாங்கி நிஷா.
இப்போது இவரை தெரியாத மக்கள் இல்லை என்று கூறலாம், சின்னத்திரை-வெள்ளித்திரை என இரண்டிலும் மாஸ் காட்டி இருக்கிறார்.
இவர் சினிமாவில் பெரிய அளவில் முன்னேற தூணாக இருப்பது அவரது கணவர் ரியாஸ் என பல மேடைகளில் கூறியிருக்கிறார். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளார்கள்.
வைரல் வீடியோ
நிறைய விஷயங்கள் குறித்து வீடியோ வெளியிடும் அறந்தாங்கி நிஷா சமீபத்தில் ஒரு பதிவு போட்டுள்ளார்.
அதில், ஒரு நிகழ்ச்சிக்காக மதுரைக்கு போயிட்டு இருக்கும் போது, அருமை சகோதரர் இவர் பெயர் கண்ணன் எல்லா ஆண்களும் தன்னுடைய குடும்பத்திற்காக என்ன வெயில் வந்தாலும் என்ன மழை வந்தாலும் எல்லாத்தையும் தாண்டி தன்னை நம்பியிருக்கக்கூடிய வந்தாலும் பிள்ளைகளுக்காகவும் உழைக்கிறத பார்க்கும்போது அவங்க மேல எப்பவுமே மரியாதை கூடும்.
இந்த சகோதரர் ஒரு மாற்றுத்திறனாளி இந்த வெயில கூட பொருட்படுத்தாமல் குடும்பத்திற்காக உழைக்கிறத பார்க்கும்போது நான் அப்பப்ப வேலை கஷ்டமா இருக்குன்னு சொல்லுவேன் இனி சத்தியமா ஒரு நாளும் சொல்ல மாட்டேன்……
அப்புறம் உனக்கு சகோதரியா ஒன்னே ஒன்னு கேக்குறேன், ஒருவேளை நம்ம சம்பாதிக்க ஆரம்பிச்சுட்டோம் அப்படின்னா தயவு செஞ்சு அப்பாக்களுக்கு ஓய்வு கொடுப்போம் என பதிவிட்டுள்ளார்.

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan
