புத்தாண்டில் புதிய தொழில் தொடங்கியுள்ள அறந்தாங்கி நிஷா- என்ன பிசினஸ் பாருங்க
அறந்தாங்கி நிஷா
விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு தனது திறமையை வெளிப்படுத்தி மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை அறந்தாங்கி நிஷா.
அந்த நிகழ்ச்சியில் மிகவும் பிரபலமானவர் நிறைய ஷோக்கள், தனியார் நிகழ்ச்சிகள், வெளிநாடு நிகழ்ச்சி, படங்களில் நடிப்பது என பிஸியாக ஒரு ரவுண்டு வந்தார்.
அதோடு இவர் பிக்பாஸ் 4வது சீசனிலும் கலந்துகொண்டார், அதனால் நிறைய மோசமான விமர்சனங்களையும் எதிர்க்கொண்டார்.
இப்படி நடிப்பில் பிஸியாக இருக்கும் அறந்தாங்கி நிஷா மக்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளையும் அவ்வப்போது செய்து வருகிறார்.
புதிய தொழில்
தமிழ் புத்தாண்டு தினமாக இன்று அறந்தாங்கி நிஷா புது தொழில் ஒன்றை தொடங்கி இருக்கிறார்.
தனது வீட்டின் அருகிலேயே நிஷா பேஷன்ஸ் என்கிற துணிக்கடை ஒன்றை தொடங்கியுள்ளார்.
அவர் வெளியிட்ட வீடியோவில், என்னுடைய எல்லா வளர்ச்சிக்கும் என் கூடவே இருந்த என் உறவுகளுக்கு நன்றி என தெரிவித்ததோடு, என்னுடைய புது முயற்சியான நிஷா பேஷனுக்கு ஆதரவளிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.
`
You May Like This Video

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu
