ரெட் அலர்ட் விஜய் டிவிக்கு விளையாட்டா போச்சு.. தாக்கி பேசிய அறந்தாங்கி நிஷா
சென்னையில் கடும் புயல் மழை பொழியும் என வானிலை மையம் ரெட் அலர்டு கொடுத்திருக்கிறது. மக்கள் பாதிக்கப்பட கூடாது என்பதற்காக கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை, அலுவலகங்கள் செல்லாமல் பணியாளர்கள் வீட்டில் இருந்து பணியாற்ற வேண்டும் உள்ளிட்ட பல அறிவுரைகளை அரசு கொடுத்து இருக்கிறது.
இருப்பினும் விஜய் டிவி தனக்கு லீவு கொடுக்கவில்லை என சொல்லி அறந்தாங்கி நிஷா ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.
வீடியோ
"ஸ்கூல், காலேஜ் எல்லாம் மழை வந்தால் லீவு விடுறாங்க ல.. அதே மாதிரி ஷூட்டிங் லீவா என எட்டி பார்த்துட்டு இருக்கேன்" என நிஷா சொல்ல, 'கார் வந்து அரை மணி நேரம் ஆச்சுகா' என எதிரில் இருப்பவர் சொல்கிறார்.
"வானிலை மையம் ரெட் அலர்டு கொடுத்திருக்காங்க. இந்த அலர்ட் எல்லாம் விஜய் டிவிக்கு விளையாட்டா போச்சு. ச்சை" என அறந்தாங்கி நிஷா சலித்துக்கொண்டே கூறுகிறார்.
இருப்பினும் ஷூட்டிங் லீவு போட்டால் சோறுக்கு என்ன செய்வது என சொல்லி வேலைக்கு கிளம்பிவிட்டார் அவர்.
You May Like This Video

டி20யில் 304 ஓட்டங்கள் குவித்த இங்கிலாந்து! 141 ஓட்டங்கள் விளாசிய வீரர்..அதிர்ந்த கிரிக்கெட் உலகம் News Lankasri
