ட்ரைலரை பார்த்து பாராட்டிய ரஜினிகாந்த்.. அறிமுக இயக்குனரான அரவிந்த் குமார் ரவி வர்மா
அறிமுக இயக்குனரான அரவிந்த் குமார் ரவி வர்மா சென்னை என்கிற மெட்ராஸ் பைலட் படத்தை இயக்கிவர் அரவிந்த் குமார் ரவி வர்மா.
இந்த பைலட் படத்தின் ட்ரைலரை பார்த்துவிட்டு நடிகர் ரஜினிகாந்த் இயக்குனர் அரவிந்த் குமார் ரவி வர்மாவை பாராட்டியுள்ளார்.
மேலும், இந்த பைலட் படத்தை நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்துவிட்டு பலரும் பாராட்டினார்கள்.
தற்போது அரவிந்த் குமார் ரவி வர்மா தெலுங்கில் புதிய படத்தை இயக்கவுள்ளாராம். இப்படத்தில் பட்டாஸ் படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமான Mehreen Pirzada கமிட்டாகியுள்ளார்.
மேலும், இப்படத்தில் விக்ராந்த் என்பவர் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியுள்ளது.