ரசிகர் மன்றம் வைத்துள்ள நடிகரின் வாரிசுகள் பெரிய ஆளாகிறார்கள், ஆனால் அப்பாவிகள்.... அரவிந்த் சாமி ஓபன் டாக்
அரவிந்த் சாமி
நடிகர் அரவிந்த்சாமி என்றாலே ரோஜா படம்தான் முதலில் ஞாபகம் வரும்.
அந்த அளவிற்கு அப்படம் அவருக்கு பெரிய பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்தது. பின் தொடர்ந்து காதல் படங்களில் நடித்து பெண்களின் கனவு கண்ணனாக வலம் வந்தார்.
இடையில் சில ஆண்டுகள் படங்கள் நடிக்காமல் இருந்ததால் மக்கள் இவரை மறந்தே விட்டார்கள் என்று கூறலாம்.
நீண்ட இடைவேளைக்கு பிறகு மணிரத்னம் இயக்கிய கடல் படத்தின் மூலம் மீண்டும் சினிமாவில் என்ட்ரி கொடுத்தவருக்கு ஜெயம் ரவியின் தனி ஒருவன் வேறலெவல் வரவேற்பு கொடுத்தது.
அதில் தரமான வில்லனாக நடித்து அசத்தினார், கடைசியாக அரவிந்த் சாமி நடிப்பில் மெய்யழகன் படம் வெளியானது.
சிறந்த கதைக்களத்தை கொண்ட இப்படமும் சூப்பர் ஹிட்டானது.
ரசிகர் மன்றம்
அரவிந்த் சாமி, தனக்கு தோன்றிய விஷயங்களை மிகவும் போல்டாக சொல்லக் கூடியவர். இவர் ஒரு பேட்டியில் ரசிகர் மன்றங்கள் குறித்து ஒரு கருத்து தெரிவித்துள்ளார்.
எந்த ஒரு நடிகரின் மகனும் ரசிகர் மன்றத்தில் இருப்பதில்லை, அப்பாவி இளைஞர்கள் ரசிகர் மன்றம் வைத்து அவரது வாழ்க்கையை தொலைக்கிறார்கள்.
நடிகர்கள் அவர்களது மகனை பெரிய ஆளாக்கிவிட்டு பிறர் அப்பாவி மகன்களை வைத்து ரசிகர் மன்றம் நடத்துவது கொஞ்சம் கூட நியாயமில்லை என கூறிய விஷயம் சமூக வலைதளங்களில் வைரலாகிறது.