25 வருடங்களுக்கு பின் மலையாளத்தில் ரீ-என்ட்ரி கொடுக்கும் நடிகர் அரவிந்த் சாமி.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
தமிழ் திரையுலகில் ரோஜா படத்தின் மூலம் அறிமுகமாகி, பல பெண்களின் மனதை கவர்ந்தவர் நடிகர் அரவிந்த் சாமி.
இவர், சமீபத்தில் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளியான தலைவி படத்தில் எம்.ஜி.ஆர் வேடத்தில் நடித்து ரசிகர்களின் பாராட்டுக்களை பெற்று வருகிறார்.
இந்நிலையில் தமிழ் மலையாளத்தில் நடிகர் ஆர்யா ஓட்டு என்ற பெயரில் ஒரு படம் தயாரிக்கிறார்.
பெல்லினி இயக்கும் இந்த படத்தில் குஞ்சாகோபோபனுடன் இணைந்து அரவிந்த்சாமியும் நடிக்கிறார்.
அந்தவகையில் இதற்கு முன்பு மலையாளத்தில் பரதன் இயக்கத்தில் தேவராகம் என்ற படத்தில் நடித்திருந்தார் அரவிந்த் சாமி.
இதன்பின், 25 வருடங்களுக்குப்பிறகு நடிகர் அரவிந்த் சாமி மீண்டும் மலையாளத்தில் நடிக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.