ஆபரேஷனுக்கு பிறகு தொகுப்பாளினி அர்ச்சனாவின் நிலை என்ன - அவரே வெளியிட்ட தகவல்

archana vijay tv
By Kathick Aug 09, 2021 03:10 AM GMT
Report

ஜீ தமிழ் தொலைக்காட்சியின் மூலம் பிரபலமான தொகுப்பாளினி அர்ச்சனா, பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் விஜய் தொலைக்காட்சிக்கு பல ஆண்டுகள் கழித்து மீண்டும் வந்தார்.

ஆம், அர்ச்சனா தனது சின்னத்திரை வாழ்க்கையை சன் டிவியில் ஆரம்பித்து அதன்பின் விஜய் டிவியில் சில ஆண்டுகள் பணிபுரிந்து அதன்பின் தான் ஜீ தமிழ் டிவிக்கு சென்றார்.

மீண்டும் விஜய் டிவிக்கு வந்த இவர் தற்போது விஜய் தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் Mr. And Mrs சின்னத்திரை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

அதுமட்டுமின்றி நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் படத்தில் மிகவும் முக்கியமான கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார் அர்ச்சனா. சமீபத்தில் கூட இவருக்கு ஆபரேஷன் நடந்ததிருந்தது.

அதன்பின் உடல் நலமுடன் வீடு திரும்பினார். இந்நிலையில் தொகுப்பாளினி அர்ச்சனா, தனது ஆபரேஷன் குறித்து, வெளிப்படையாக கூறியுள்ளார்.

இதில் ' ஆபரேஷனுக்கு பிறகு 10 நாட்கள் மருத்துமனைவியில் தங்கியிருந்து வீடு திரும்பினேன். உடல் எடையும் கொஞ்சம் குறைந்துள்ளது. மூக்கு வழியே ஆபரேஷன் நடந்ததால், குரலும் பழைய நிலைமைக்கு இன்னும் திரும்பவில்லை. இன்னும் சில வாரங்கள் எனக்கு ஓய்வு தேவைப்படுகிறது. அதன்பின் மீடியா வேலைக்கு திரும்பிவிடுவேன் ' என்று தெரிவித்துள்ளார்.  


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US