காதலர் தினத்தையொட்டி பிக் பாஸ் அர்ச்சனா, அருண் செய்த செயல்.. வைரல் வீடியோ
அர்ச்சனா - அருண்
பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக நுழைந்து டைட்டிலை வென்று மக்கள் மத்தியில் இடம் பிடித்தவர் நடிகை அர்ச்சனா.
இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன் விஜய் டிவி தொடரில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் பாரதி கண்ணம்மா சீரியல் புகழ் நடிகர் அருண் பிரசாத் என்பவரை கடந்த 5 ஆண்டுகளாக ரகசியமாக காதலித்து வந்துள்ளார்.
அருண் பிக் பாஸ் 8ம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு உள்ளார் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் இவர்கள் காதலை வெளிப்படையாக அறிவித்தனர்.
வைரல் வீடியோ
இந்நிலையில், நேற்று காதலர் தினத்தையொட்டி அருண் மற்றும் அர்ச்சனா இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் மற்றும் அழகிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். தற்போது, இந்த வீடியோவை கண்டு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri
