தடையை மீறி திருவண்ணாமலை அண்ணாமலையார் மலை மீது ஏறிய அர்ச்சனா, அருணுக்கு அபராதம்..
அர்ச்சனா - அருண்
பிக் பாஸ் 7 டைட்டில் வின்னர் அர்ச்சனா, பிக் பாஸ் 8 போட்டியாளர் அருண் பிரசாத் இருவரும் காதலித்து வருவதை நாம் அறிவோம். இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ளவுள்ளனர்.

இந்த நிலையில், இவர்கள் இருவரும் சேர்ந்து திருவண்ணாமலை கோவிலுக்கு சென்றிருந்தனர். அங்கு கோவிலுக்கு பின்புறம் இருக்கும் அண்ணாமலையார் மலை ஏறி உச்சி வரை சென்று ரீல்ஸ் எடுத்திருக்கிறார்கள். அங்கு எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்திருந்தார் அர்ச்சனா.
அபராதம்
அண்ணாமலையார் மலையில் ஏற வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். அப்படி இருக்கும்போது வனத்துறையிடம் அனுமதி கேட்காமல் மலை உச்சி வரை சென்று வீடியோ வெளியிட்டதால் சர்ச்சையில் சிக்கினார் அர்ச்சனா. அண்ணாமலையார் மலையில் ஏற வனத்துறையினர் தடை விதித்திருந்த நிலையில், வனத்துறையிடம் அனுமதி கேட்காமல் மலை உச்சி வரை சென்று வீடியோ எடுத்ததால் சர்ச்சையில் சிக்கியுள்ளனர்.

இந்நிலையில், திருவண்ணாமலை அண்ணாமலையார் மலை மீது தடையை மீறி ஏறிய சின்னத்திரை நடிகர்களான அர்ச்சனா, அருண் பிரசாத் ஆகியோருக்கு தலா ரூ. 5000 அபராதம் விதித்து மாவட்ட வன அலுவலர் சுதாகர் உத்தரவிட்டுள்ளார்.