சாரா புகைப்படத்தை மோசமாக எடிட் செய்த பள்ளி மாணவன்.. VJ அர்ச்சனா வேதனை
அர்ச்சனா
தொகுப்பாளினி என்று சொன்னதுமே ஒரு சிலருடைய முகம் டக்கென்று அனைவருக்கும் ஞாபகத்திற்கு வந்துவிடும் அந்த லிஸ்ட்டில் இருப்பவர் தான் அர்ச்சனா. இவருடைய மகள் பல சின்னதிரை நிகழ்ச்சிகளில் கலந்துள்ளார்.
மேலும், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டாக்டர் படத்தில் சாரா மற்றும் அர்ச்சனாவும் இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
வேதனை
இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டு பேசிட அர்ச்சனா, எனக்கும் சாராவுக்கும் அடிக்கடி சண்டை வரும். இப்போ கூட அவளிடம் சண்டை போட்டுட்டு தான் வந்தேன்.
ஏன் என்றால், சமீபத்தில் அவள் நண்பர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். அந்த புகைப்படத்தில் சாராவுடன் பொன்னும் இரண்டு பசங்களும் இருந்தார்கள். ஆனால் சக மாணவன், சாராவும் ஒரு பையனும் ஒண்ணா இருப்பது போல் கிராப் செய்து. இவர்கள் காதலர்கள் என குறிப்பிட்டு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.
நான் அந்த புகைப்படம் பார்த்தவுடன் எனக்கு டக்குனு கோபம் வந்துவிட்டது.நான் சாராவை குறித்து மட்டும் யோசிக்கவில்லை. அந்த பையனை பற்றியும் தான் கவலைப்பட்டேன் என்று அர்ச்சனா தெரிவித்து உள்ளார்.

மன்னிக்கவே முடியாது; உயிரிழந்தவரின் சகோதரர் திட்டவட்டம் - கேரள நர்சுக்கு மரண தண்டனை உறுதி? IBC Tamilnadu

என் பிள்ளைகள் எனக்கு வேண்டும்... கர்நாடகா குகையில் கண்டுபிடிக்கப்பட்ட பெண்ணின் முன்னாள் கணவர் கோரிக்கை News Lankasri
