விஜய்யின் 68வது படத்தின் டைட்டில் குறித்த அப்டேட் போட்ட தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி- அட சூப்பரு
விஜய்யின் 68
லோகேஷ் கனகராஜுடன் இணைந்து லியோ என்ற வெற்றிப்படத்தை கொடுத்த விஜய் இப்போது வெங்கட் பிரபுவுடன் முதன்முறையாக இணைந்துள்ளார்.
விஜய்யின் இந்த 68வது படத்தின் படப்பிடிப்பு வெளிநாட்டில் நடந்து வந்தது. இந்த நேரத்தில் தான் விஜய்யின் 68வது படத்தின் டைட்டில் குறித்து நிறைய பெயர்கள் சமூக வலைதளங்களில் வலம் வந்தது.
படத்திற்கு பாஸ் என தான் படக்குழு பெயர் வைத்துள்ளதாகவும், புத்தாண்டு அன்று வெளியாகும் எனவும் கூறப்பட்டது.
தயாரிப்பாளர் டுவிட்
இந்த நிலையில் விஜய்யின் 68வது படத்தின் டைட்டில் அப்டேட் குறித்து அர்ச்சனா கல்பாத்தி டுவிட் போட்டுள்ளார். அதில் அவர், தற்போது தான் எல்லா டுவிட் பார்த்தேன், உங்களது அன்பிற்கு நன்றி.
ஆனால் பொருமையாக இருங்கள், வெங்கட் பிரபு ஸ்பெஷலான விஷயத்தை செய்து வருகிறார். ஆனால் கண்டிப்பாக பாஸ் கிடையாது என டுவிட் செய்துள்ளார்.
Just saw all the updates. Thank you for the love ❤️ Keep calm and wait for the real one very soon @vp_offl is cooking something special. It is definitely not Boss or Puzzle ? Happy Morning everyone ❤️ #Thalapathy68
— Archana Kalpathi (@archanakalpathi) December 20, 2023