விஜய்யின் 69வது பட இயக்குனர் எனக்கு தெரியும்- கோட் பட தயாரிப்பாளர் கூறிய விஷயம்
விஜய்யின் கோட்
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் தனது 68வது படத்தில் நடித்து வருகிறார்.
ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில் தயாராகி வரும் இப்படத்தில் விஜய்யுடன் பிரசாந்த், பிரபுதேவா, லைலா, சினேகா, அஜ்மல் என பலர் நடிக்கிறார்கள்.
விஜய் மற்றும் வெங்கட் பிரபு முதன்முறையாக கூட்டணி அமைத்திருப்பதால் படத்திற்கான எதிர்ப்பார்ப்பு பெரிய அளவில் உள்ளது.
படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் நடந்து வருகிறது. தமிழ் புத்தாண்டை முன்னிட்டு படத்தின் ஃபஸ்ட் சிங்கிளும் வெளியிடப்பட்டது, படம் செப்டம்பர் 5ம் தேதி ரிலீஸ் என்றும் அறிவிக்கப்பட்டது.

தயாரிப்பாளர் பேட்டி
இப்படம் குறித்து நிறைய அப்டேட்டுகள் வருவதால் ரசிகர்கள் சந்தோஷமாக இருக்க இன்னொரு பக்கம் விஜய்யின் கடைசி படமான 69வது படம் பற்றிய தகவல்களையும் ரசிகர்கள் அதிகம் எதிர்ப்பார்க்கிறார்கள்.
இந்த நிலையில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஒரு பேட்டியில், விஜய்யின் 69வது படத்தை மணிரத்னம் இயக்கினால் நன்றாக இருக்கும், அந்த படத்தை நாங்களே தயாரிக்க வேண்டும் என்பது எனது ஆசை.
விஜய்யின் 69வது படத்தின் இயக்குனர் யார் என்று எனக்கு தெரியும், அதை நான் இப்போது சொல்ல மாட்டேன் என்று கூறியிருக்கிறார்.

நெதன்யாகுவின் அழுத்தம்... அணு ஆயுதத் தாக்குதலுக்கும் ட்ரம்ப் தயாராகலாம்: அம்பலப்படுத்தும் கார்ல்சன் News Lankasri