பகிரங்கமாக பேசிய அர்ச்சனா! உண்மையை போட்டுடைத்தாரா? அடுத்தடுத்து கேள்வி!
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த சீசன் 4 ல் Wild Card சுற்று மூலம் உள்ளே போட்டியாளராக வந்து கடந்த வாரம் வெளியேறிவர் நிகழ்ச்சி தொகுப்பாளர் அர்ச்சனா.
ஏற்கனவே அர்ச்சனா, பாலாஜி இடையே நடைபெற்ற உணர்ச்சி வசமான பாசம், சண்டை போராட்டங்களை யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.
அர்ச்சனா பிக்பாஸ் வீட்டிற்குள் அன்பு தான் ஜெயிக்கும் என தொடர்ந்து கூறி வந்தார். ரியோ, ரமேஷ், ஆரி, கேபி, சோம் ஆகியோர் அவருடனேயே இருந்து வந்தனர். ஒரு அணியாக மாறியது. அதற்கு அன்பு கேங் எனவும் பெயர் வைத்தனர். அர்ச்சனா அதற்கு தலைமை தாங்கினார்.
இதனால் அர்ச்சனா குரூப்பிஸம் செய்வதாக போட்டியாளர்களே குற்றம் சாட்டி வந்தனர். ரசிகர்களுக்கு அப்படியே தான் கூறி வந்தனர்.
இந்நிலையில் டிவிட்டரில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அதில் ரசிகர் ஒருவர் அர்ச்சனா, சமையல், டாஸ்க் மற்றும் எண்டர்டெயின் மெண்ட் விசயங்களில் டாப்பராக இருக்கின்றீர்கள். ஆனால் ஆரியிடம் அன்பை காட்டுவதில் மட்டும் தோற்றுவிட்டீர்களே? ஏன் என கேட்டார்.
அதற்கு அர்ச்சனா ஆரிக்கு அன்பு காட்டியது உங்களுக்கு காட்டப்படவில்லை. அதான் பிக்பாஸ் என கூறினார்.
இந்நிலையில் மற்றொருவர் மோசமான எடிட்டிங் என சொல்லப்போகிறீர்களா என கேட்டார்.
அதற்கு அர்ச்சனா தவறான எடிட்டிங் என நீங்கள் தான் கூறுகிறீர்கள், நான் சொல்லவில்லை, நல்ல எடிட்டிங் தான், ஆரிக்காக மகிழ்ச்சி என கூறியுள்ளார்.
மேலும் நல்ல எடிட்டிங் என சூசகமாக ஆரியை கிண்டல் செய்துள்ளார்.