மூளையில் சர்ஜரி செய்து ஒய்வில் இருந்த அர்ச்சனாவா இது?- எந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார் பாருங்க
தொகுப்பாளினிகள் சிலர் பல வருடங்களாக இந்த துறையில் கலக்கி வருகிறார்கள். அதில் இப்போது கலக்கும் பிரபலங்களுக்கு எல்லாம் ஒரு உதாரணமாக இருந்தவர் அர்ச்சனா.
இவர் 90களில் இருந்தே மிகவும் பிரபலமான தொகுப்பாளினியாக இருக்கிறார். ஜீ தமிழில் தொடர்ந்து நிகழ்ச்சிகள் நடத்திவந்த அவர் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் விஜய் டிவிக்கு வந்தார்.
பின் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க ஆரம்பித்தார். திடீரென அவருக்கு மூளையில் சர்ஜரி நடக்க தொகுப்பாளினி பணியில் இருந்து விலகினார். தற்போது ஓய்வில் இருப்பதாக அவரது யூடியூப் பக்கத்தில் கூறியிருந்தார்.
இந்த நிலையில் விஜய்யில் நம்ம வீட்டு கல்யாணம் என்ற ஷோ படப்பிடிப்பு நடந்துள்ளது. சினேகன் மற்றும் கனிகாவின் திருமண வரவேற்பு ஸ்பெஷல் நிகழ்ச்சியாக படப்பிடிப்பு செய்யப்பட்டுள்ளது.
அந்நிகழ்ச்சியில் நீண்ட இடைவேளைக்கு பிறகு கலந்துகொண்டிருக்கிறார் அர்ச்சனா, அந்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.