தளபதி விஜய்யின் உறவினரும் நடிகருமான விக்ராந்தின் மனைவி மற்றும் அம்மா இருவரும் சீரியல் நடிகைகளா?
தளபதி விஜய்யின் நெருங்கிய உறவினர் தான் நடிகர் விக்ராந்த், இவர் தமிழ் சினிமாவில் ஹீரோவாக பல திரைப்படங்களில் நடித்திருந்தார்.
இவர் ஹீரோவாக பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் கோரிப்பாளையம், முத்துக்கு முத்தாக உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து பெரிய பிரபலமானார்.
மேலும் கவண், தொண்டன், நெஞ்சில் துணிவிருந்தால் உள்ளிட்ட திரைப்படங்களிலும் இவரின் நடிப்பு கவனத்தை ஈர்த்தது, கடைசியாக இவர் நடிப்பில் பக்ரீத் திரைப்படம் வெளியானது.
இந்நிலையில் இவரின் மனைவி மற்றும் அம்மா இருவரும் சீரியல் நடிகைகள், ஆம் இவரின் மனைவி மானசா சன் டிவி-யில் உதிரிப்பூக்கள் தொடரில் நடித்துள்ளார்.
மேலும் அவரின் அம்மாவான ஷீலா தற்போது பிரபல பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்து வருகிறார்.


