கர்ப்பமாக இருக்கிறாரா சோபிதா? 2ம் திருமணம் ஆகி 5 மாதத்தில் நாக சைதன்யா வீட்டில் விசேஷம்
நடிகை சமந்தாவை 2021ல் பிரிந்தபோதே நாகா சைதன்யா மற்றும் சோபிதா ஆகியோர் தொடர்பில் இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. அவர்கள் ஒன்றாக வெளிநாடுகளில் இருக்கும் ஸ்டில்களும் வைரல் ஆகின.
ஒருகட்டத்தில் தங்கள் காதலை வெளிப்படையாக அறிவித்த நிலையில், கடந்த வருடம் அவர்களுக்கு திருமணமும் நடந்து முடிந்தது.
கர்ப்பமாக இருக்கிறாரா?
திருமணம் முடிந்து 5 மாதங்கள் மட்டுமே ஆகும் நிலையில் தற்போது சோபிதா கர்ப்பமாக இருக்கிறார் என செய்திகள் பரவி வருகிறது. இருப்பினும் அதை பற்றி அவர்கள் தரப்பில் இருந்து அறிவிப்பு எதுவும் வரவில்லை.
கர்ப்பமாக இருப்பதால் தான் சோபிதா வெளியில் வரும்போது loose ஆன உடைகளில் வருகிறார் என்றும் கூறப்படுகிறது. இது கிசுகிசுவா அல்லது உண்மையா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.