ரசிகர்களே வலிமை குறித்து வந்த சூப்பர் அப்டேட்- தெறிக்கவிட்ட அஜித், நீங்கள் தயாரா?
இளம் இயக்குனர் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துவரும் படம் வலிமை. படத்தின் படப்பிடிப்பு 2019ம் ஆண்டே தொடங்கப்பட்டு விட்டது.
இந்நேரம் படம் ரிலீஸ் ஆகியிருக்கும், ஆனால் கொரோனா எல்லாவற்றையும் கெடுத்துவிட்டது. படப்பிடிப்பு லாக்டவுன் முடிந்து வேகமாக நடத்தப்பட்டு தற்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடப்பதாக தெரிகிறது.
ரசிகர்கள் அஜித் கூறியதால் அமைதி காக்கின்றனர், ஆனாலும் அப்டேட் எப்போது என்று தான் கவலையில் உள்ளார்கள்.
இந்த நேரத்தில் படம் குறித்து ஒரு தகவல். அதாவது வேதாளம் படத்தில் வந்த ஆலுமா டோலுமா பாடலை போல இப்படத்தில் ஒன்று உள்ளதாம்.
அதில் ஆலுமா டோலுமா பாடலுக்கு ஆடிய நடனத்தை விட வெறியேற்றும் வகையில் இதில் நடனம் ஆடியுள்ளாராம் அஜித்.
ஆலுமா டோலுமா பாடலுக்கு இப்போதும் ரசிகர்கள் வெறியாக நடனம் ஆடி வரும் நிலையில் இப்படி ஒரு தகவல் ரசிகர்களுக்கு மேலும் கொண்டாட்டத்தை கொடுத்துள்ளது.