ஜீ தமிழ் சீரியல் நடிகைகளுக்குள் சண்டையா? உண்மையை போட்டுடைக்கும் வகையில் அவர்கள் வெளியிட்ட பதிவு
பிரபல ஜீ தமிழ் தொலைக்காட்சி தற்போது முன்னணி தொலைக்காட்சியாக விளங்கி வருகிறது, அந்த வகையில் இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களும் TRP-யில் டாப்பில் உள்ளது.
மேலும் இதில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடர்கள் தான் செம்பருத்தி, பூவே பூச்சூடவா, யாரடி நீ மோஹினி. தற்போது இந்த சீரியல் நடிகைகள் இணைந்து வீடியோ ஒன்றில் வந்துள்ளனர்.
ஆம், பூவே பூச்சூடவா சீரியல் நடிகை ரேஷ்மா தான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.
மேலும் அதில் "நாங்கள் ஏன் சந்திக்கவில்லை, புகைப்படங்கள் பதிவிடுவதில்லை, பேசுவதில்லை என்று கேட்கும் அனைவரின் அக்கறைக்கும் நன்றி.
நாங்கள் எப்போதுமே ஒன்றாக தான் இருக்கிறோம் என்பதை நாங்கள் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறோம்.
புகைப்படங்களை பதிவிடாததால் நாங்கள் சண்டையிட்டோம் என்று அர்த்தம் இல்லை. எனவே இதே கேள்வியை மீண்டும் மீண்டும் கேட்பதை நிறுத்துங்கள், நன்றி" என அவர் கூறியுள்ளார்.