இனி பாட மாட்டேன்.. திடீரென ஓய்வை அறிவித்த அரிஜித் சிங்! ரசிகர்கள் உச்சகட்ட அதிர்ச்சி
ஹிந்தி சினிமாவில் மெலோடி பாடல்களுக்கு பெயர்பெற்றவர் அரிஜித் சிங். அவரது பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய ஹிட் தான்.
பல கோடி ரசிகர்களை வைத்து இருக்கும் அரிஜித் சிங் தற்போது திடீரென ஓய்வை அறிவித்து இருக்கிறார். இனி எந்த புது பாடலும் பாட மாட்டேன் என அவர் தெரிவித்து இருக்கிறார்.

ரசிகர்கள் அதிர்ச்சி
"ஹலோ. எல்லோருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். இத்தனை வருடங்களாக எனக்கு அன்பை கொடுத்த எல்லோருக்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன்."
"இனி பின்னணி பாடகராக எந்த புது assignmentsம் எடுக்க மாட்டேன் என்பதை மகிழ்ச்சியாக அறிவிக்கிறேன்.இதோடு முடித்துக்கொள்கிறேன். இது ஒரு அற்புதமான பயணம்" என அரிஜித் சிங் பதிவிட்டு இருக்கிறார்.
இதை பார்த்து ரசிகர்கள் உச்சகட்ட அதிர்ச்சி ஆகி இருக்கின்றனர்.