கெரியரின் உச்சத்தில் பாடகர் அரிஜித் சிங் ஓய்வு பெற்றது இதற்கு தானா? லேட்டஸ்ட் தகவல்
ஹிந்தி சினிமாவில் மேலோடி பாடல்களுக்கு பெயர் பெற்றவர் பாடகர் அரிஜித் சிங். அவரது ஹிட் பாடல்களை பட்டியலிட்டால் மிகப்பெரிய லிஸ்ட் வரும்.
அரிஜித் சிங் சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பில் தான் இனி எந்த படங்களிலும் பாடபோவது இல்லை என அறிவித்து இருந்தார். இதனால் அவரது ரசிகர்கள் கடும் அதிர்ச்சி ஆகி உள்ளனர்.

அரசியலில் நுழைகிறாரா Arijit Singh?
இந்நிலையில் லேட்டஸ்ட் தகவல் என்னவென்றால் அரிஜித் சிங் அரசியலில் நுழைவதற்காக தான் சினிமாவில் இருந்து விலகி இருக்கிறார் என்பது தான்.
அவர் விரைவில் மேற்கு வங்கத்தில் அரசியல் கட்சி தொடங்கி தேர்தலில் போட்டியிட இருக்கிறார் என கூறப்படுகிறது. இருப்பினும் இந்த வருடம் மேற்கு வங்கத்தில் நடக்கும் சட்டசபை தேர்தலில் அவர் போட்டியிடமாட்டார் என முன்னணி ஹிந்தி மீடியாக்களில் செய்தி வெளியாகி இருக்கிறது.
அரசியல் பயணத்தில் கவனம் செலுத்துவதற்காகத்தான் அரிஜித் சிங் இனி பாடல்கள் பாடப்போவது இல்லை என தற்போது அறிவித்து இருப்பதாகவும் செய்தி பரவி வருகிறது. இருப்பினும் அரசியலில் நுழைவது பற்றி அவர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு எதையும் இன்னும் வெளியிடவில்லை.
