செஸ் ஒலிம்பியாட் தொடக்கவிழாவில் பாடகர் அறிவு புறக்கணிப்பு ! மீண்டும் எழுந்த Enjoy Enjaami பாடல் சர்ச்சை
Enjoy Enjaami
கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான Enjoy Enjaami என தனி அல்பம் பாடல் பெரிய ஹிட்டானது. இசையமைப்பாளர் சந்தோஷ் சிவன் இசையமைத்த இப்பாடலில் பாடகர்கள் தீ மற்றும் அறிவு பாடியிருந்தனர்.
பெரியளவில் வைரல் ஹிட்டான இப்பாடல் சர்ச்சைக்களையும் சந்தித்தது, அந்த வகையில் ரோலிங் ஸ்டோனின் என்கிற இதழ் அவர்களின் அட்டை படத்தில் என்சாய் எஞ்சாமி பாடலும், நீயே ஒலி ஆகிய பாடல்களை பாடிய பாடகி தீ மற்றும் ஷான் வின்சென்ட் டீ பால் ஆகியோரின் போட்டோக்களை அட்டை படத்தில் வெளியிட்டிருந்தது.
இதன்பின் இயக்குநர் ரஞ்சித் மட்டுமின்றி தெருக்குரல் அறிவின் ஆதரவாளர்கள் இதனை கடுமையாக சாடினார்கள். பின்னர் தங்கள் முடிவை மாற்றிய ரோலிங் ஸ்டோனின் இதழ், மீண்டும் அறிவு படத்துடன் கூடிய புதிய அட்டை படத்தை வெளியிட்டது.
மேலும் சமீபத்தில் நடந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியின் துவக்க விழாவில் என்ஜாய் எஞ்சாமி பாடல் இடம்பெற்றிருந்தது. அதில் அறிவு இடம் பெறவில்லை, மாறாக பாடகி தீ மட்டும் பாடினார். இந்நிலையில் இது தொடர்பாக எந்த ஒரு கருத்தும் தெரிவிக்காமல் இருந்த அறிவு, தற்போது அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இது குறித்து பெரிய பதிவை வெளியிட்டுள்ளார்.
#BeyondBorders: Wordsmith, composer and rapper @TherukuralArivu appears on our August 2021 digital cover. Following acclaim for his album ‘Therukural’ with @ofrooooo, the Tamil artist has scorched a path out, raising his voice against systemic injustices
— Rolling Stone India (@RollingStoneIN) August 27, 2021
Photo: @beraviphoto pic.twitter.com/7lPd5bSfZW
அறிவி வெளியிட்ட பதிவு
அதில் “ நான் "இசையமைத்தேன்" "எழுதினேன்" , பாடினேன்" & "நடித்தேன்" என்ஜாமியை அனுபவிக்கவும். இதை எழுத யாரும் எனக்கு ஒரு டியூனையோ, மெலடியையோ அல்லது ஒரு வார்த்தையோ கொடுக்கவில்லை. இப்போது இருக்கும் அனைத்திற்கும் கிட்டத்தட்ட 6 மாதங்கள் தூக்கமில்லாமல், மன அழுத்தம் நிறைந்த இரவுகளையும் பகலையும் கழித்தேன்..
இது ஒரு சிறந்த குழுப்பணி என்பதில் சந்தேகமில்லை. அது அனைவரையும் ஒன்றாக அழைக்கிறது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அது வள்ளியம்மாளின் சரித்திரமோ அல்லது நிலமற்ற தேயிலைத் தோட்ட அடிமை என் முன்னோர்களின் சரித்திரமோ அல்ல. என்னுடைய ஒவ்வொரு பாடலும் இந்த தலைமுறை ஒடுக்குமுறையின் அடையாளமாக இருக்கும்.
இந்நாட்டில் 10000 நாட்டுப்புறப் பாடல்கள் உள்ளன. முன்னோர்களின் மூச்சு, அவர்களின் வலி, அவர்களின் வாழ்க்கை, அன்பு, அவர்களின் எதிர்ப்பு மற்றும் அவர்களின் இருப்பு பற்றிய அனைத்தையும் சுமந்து செல்லும் பாடல்கள். இது அனைத்தும் அழகான பாடல்களில் உங்களிடம் பேசும். ஏனென்றால் நாம் இரத்தமும் வியர்வையுமான விடுதலைக் கலைகளின் மெல்லிசைகளாக மாறிய தலைமுறை.
பாடல்கள் மூலம் பாரம்பரியத்தை எடுத்துச் செல்கிறோம். நீங்கள் உறங்கும் போது உங்கள் பொக்கிஷத்தை யார் வேண்டுமானாலும் அபகரிக்கலாம். நீங்கள் விழித்திருக்கும் போது ஒருபோதும் அது நடக்காது. ஜெய்பீம். முடிவில் எப்பொழுதும் உண்மையே வெல்லும்” என பதிவிட்டு இருக்கிறார்.
விமான நிலையத்தில் சாதாரணமாக வரிசையில் நின்றிருந்த தளபதி விஜய்