அரியவன் திரைவிமர்சனம்
அரியவன் படம் கடந்த வாரம் கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்ட படம். அதற்கு காரணம் அந்த படத்தை மித்ரன் ஆர் ஜவகர் இயக்கி இருப்பதாக தயாரிப்பாளர் சொல்கிறார், போஸ்டரிலும் அப்படி தான் இருக்கிறது, ஆனால் அந்த படத்திற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என இயக்குனர் மித்ரன் ஜவகர் கூறி இருக்கிறார். இந்த பிரச்சனை பெரிய பரபரப்பாக பேசப்பட்டது.
தற்போது அரியவன் படம் இன்று திரைக்கும் வந்திருக்கிறது. படம் எப்படி இருக்கிறது என பார்க்கலாம்.
படத்தின் ஹீரோவாக அறிமுக நடிகர் இஷான் நடித்து இருக்கிறார். ஆதரவற்ற இல்லத்தில் வளர்ந்த ஹீரோயினாக ப்ரணாலி நடித்து உள்ளார். ஹீரோ - ஹீரோயின் காதல் ஒருபக்கம் இருக்க, வில்லன் சில இளைஞர்களை கையில் வைத்து கொண்டு ஓர் மோசமான தொழில் செய்து வருகிறார்.
இளைஞர்களை வைத்து பெண்களை காதலிக்க வைத்து, அந்த பெண்களை தவறாக வீடியோ எடுத்து வைத்து கொண்டு மிரட்டி, அதன் மூலமாக சம்பாதிக்கிறார் வில்லன். இதனால் பல பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள்.
வில்லனின் வலையில் ஹீரோயினின் தோழி ஒருவரும் சிக்கிக்கொள்கிறார். அப்போது ஹீரோவை அவர்கள் உதவிக்கு நாட, அவர் வில்லனிடம் சிக்கி இருக்கும் பெண்களை காப்பாற்றினாரா என்பது தான் படத்தின் மீதி கதை.
இஷான் அறிமுக நடிகர் என்பது படம் பார்க்கும்போது அப்பட்டமாகவே தெரிகிறது. நடிப்புக்கு இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு இருக்கலாம்.
படத்தின் நீளம் குறைவு, திரைக்கதை இன்னும் பரபரப்பாக இருந்திருக்கலாம் என தோன்றினாலும்பெண்களுக்கு தேவையான ஒரு கருத்தை பதிவு செய்திருக்கிறார்கள். அதற்காகவே பாராட்டலாம்.
அரியவன் படம் பார்த்த மக்கள் கூறி இருக்கும் விமர்சனத்தை இந்த வீடியோவில் பாருங்க..