ரசிகையின் கதையை கேட்டு மேடையிலே கண்கலங்கிய ரோஜா சீரியல் அர்ஜுன் ! எமோஷனல் வீடியோ..
ரசிகையால் கண்கலங்கிய அர்ஜுன்
பிரபல சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியலில் ஒன்று ரோஜா, இந்த சீரியல் கிட்டத்தட்ட 4 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வருகிறது.
நடிகை பிரியங்கா நல்கரி ரோஜா கதாபாத்திரத்திலும், சிப்பு சூரியன் அர்ஜுன் கதாபாத்திரத்திலும் நடிக்க மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது ரோஜா சீரியல்.
மேலும் சமீபத்தில் சன் டிவி-ன் சின்னத்திரை நட்சத்திரங்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றுள்ளது. இதில் ரோஜா சீரியலின் ஹீரோ அர்ஜுன் கதாபாத்திரத்திற்கு மனம் கவர்ந்த நாயகன் என்ற விருது கிடைத்துள்ளது.
விருதினை பெறும் போது சிப்பு சூரியனின் தீவிர குழந்தை ரசிகை அவரது புகைப்படத்தை பரிசாக கொடுத்தார். அதன்பின் ஊனமுற்ற ரசிகை அண்ணா என கூறி பாசமாடு வந்த ரசிகையை கையில் தூக்கியபடி மேடைக்கு சென்றுள்ளார் சிப்பு .
மேடையில் சிப்புவிடம் ரசிகை கூறிய கதையை கேட்டு ஒட்டுமொத்த நட்சத்திரங்களும் கண்கலங்கினர் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சந்தோஷத்தில் இருக்கும் மறைந்த நடிகர் விவேக்கின் குடும்பம்- காரணம் வீடியோவுடன் இதோ