மகள் படத்தில் நடிக்க வராமல் ஏமாற்றிய நடிகர்: அர்ஜுன் சொன்ன அதிர்ச்சி புகார்

By Parthiban.A Nov 07, 2022 12:30 PM GMT
Report

அர்ஜுன்

நடிகர் அர்ஜுன் தற்போது அவரது மகள் ஐஸ்வர்யா வை தெலுங்கு சினிமாவில் ஹீரோயினாக களமிறக்கும் முயற்சியில் இருக்கிறர். ஐஸ்வர்யா தமிழில் விஷால் ஜோடியாக பட்டத்து யானை என்ற படத்தில் நடித்து அறிமுகம் ஆனவர். ஆனால் அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

அதற்கு பிறகு ஐஸ்வர்யா எந்த படங்களிலும் நடிக்காமல் இருந்தார். இந்நிலையில் தற்போது அவரை வைத்து தெலுங்கில் அர்ஜுன் ஒரு படம் எடுக்கிறார். அந்த படத்தில் அவர் ஜோடியாக விஷ்வாக் சென் என்ற நடிகர் நடிப்பதாக இருந்தது.

மகள் படத்தில் நடிக்க வராமல் ஏமாற்றிய நடிகர்: அர்ஜுன் சொன்ன அதிர்ச்சி புகார் | Arjun Complains About Vishwak Sen

ஏமாற்றிய விஷ்வாக் சென்

இந்நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங் கேரளாவில் நடந்த நிலையில் அதில் ஹீரோ விஷ்வாக் சென் பங்கேற்கவில்லை, பல முறை போன் செய்தும் எடுக்கவில்லை என அர்ஜுன் குற்றம்சாட்டி இருக்கிறார். என் வாழ்க்கையில் இப்படி யாருக்கும் நான் அதிகம் முறை போன் செய்ததில்லை என அர்ஜுன் கூறி இருக்கிறார்.

அவர் unprofessional ஆக இருப்பது பற்றி எல்லோருக்கும் தெரிய வேண்டும், என்பதற்காக தான் பிரஸ் மீட் வைத்து சொல்வதாக அர்ஜுன் தெரிவித்து இருக்கிறார்.

அதே நேரத்தில் இந்த சர்ச்சை பற்றி விளக்கம் அளித்து இருக்கும் விஷ்வாக் சென் தன்னை பற்றி பரவும் செய்தி உண்மையி இல்லை என கூறுகினர். ஷூட்டிங் தொடங்கும் ஒரு வார முன்பு தான் ஸ்கிரிப்ட் கொடுத்தார்கள். படத்தை விட்டு சென்றுவிட வேண்டும் என நான் எண்ணவில்லை, அதில் சில விஷயங்கள் பேச வேண்டும் என்று தான் கேட்டேன் என கூறி இருக்கிறார்.

தெலுங்கு சினிமாவில் இப்படி அர்ஜுன் மற்றும் இளம் நடிகர் வெளிப்படையாக மீடியா மோதிக்கொள்வது பரபரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

மகள் படத்தில் நடிக்க வராமல் ஏமாற்றிய நடிகர்: அர்ஜுன் சொன்ன அதிர்ச்சி புகார் | Arjun Complains About Vishwak Sen

35 வருடங்களுக்கு பின் கமல்ஹாசனை இயக்கும் முன்னணி இயக்குனர்! அதிகாரபூர்வ அறிவிப்பு 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US