அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் டீஸர்.. தெறிக்கும் பதிவு போட்ட நடிகர் அர்ஜுன் தாஸ்
குட் பேட் அக்லி
மைத்ரி மூவிஸ் தயாரிப்பில் அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் குட் பேட் அக்லி.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் தான் இசை. வரும் ஏப்ரல் 10ம் தேதி இப்படம் ரிலீஸ் ஆக இருக்கிறது.
இப்பட முதல் தகவல் வந்ததில் இருந்தே ரசிகர்கள் படத்தை காண மிகவும் ஆவலாக உள்ளனர். இந்த படத்தில் அஜித் சுத்தமாக உடல் எடை குறைத்து காதல் மன்னன் பட லுக்கிற்கு மாறிவிட்டார் என்றே கூறலாம்.

பட டீஸர்
இப்படத்தில் நடித்துள்ள நடிகை த்ரிஷா இடம்பெறும் காட்சியின் வீடியோ சமீபத்தில் வெளியாகி படத்திற்கான ஹைப் ஏற்றியிருந்தது. இந்த நிலையில் அஜித்தின் ஒட்டுமொத்த ரசிகர்களும் இப்போது படத்தின் டீஸருக்காக தான் ஆவலாக வெயிட்டிங்.
குட் பேட் அக்லி பட டீஸர் வரும் 28ம் தேதி மாலை வெளியாகும் என காத்துக் கொண்டிருக்க இப்படத்தில் நடித்துள்ள அர்ஜுன் தாஸ் அஜித்தின் வீரம் பட GIF வீடியோ பதிவிட்டுள்ளார். தாரை தப்பட்டை கிழயப்போகிறது என்ற பதிவு தான் அது.
இதனால் ரசிகர்கள் டீஸர் தெறிக்கும் அளவில் இருக்கப்போகிறது என ஆர்வத்துடன் உள்ளனர்.
💣🔥💥💥💥 pic.twitter.com/xHooTomisn
— Arjun Das (@iam_arjundas) February 26, 2025
கடைசி நேரத்தில் தப்பிய பிரபலம்.. பலிகாடான சீரியல் நடிகர்- அடுத்து வெளியேறுபவர் யார் தெரியுமா? Manithan