விடாமுயற்சி அஜித்திற்கு வில்லன் இவரா? எதிர்பார்க்காத ஒருவர்
விடாமுயற்சி
மகிழ் திருமேனி இயக்கத்தில் அடுத்து அஜித் நடிக்க உள்ள படத்திற்கு விடாமுயற்சி என பெயரிடப்பட்டு இருக்கிறது. இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்க தாமதம் ஆகி வரும் நிலையில், விரைவில் ஷூட்டிங் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருகிறது.
பூனேவில் முதற்கட்ட ஷூட்டிங் தொடங்க இருக்கிறதாம். அங்கு செட் போடும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

அர்ஜுன் தாஸ்
மேலும் வில்லன் யார் என்கிற தகவல் ஒன்றும் வெளியாகி இருக்கிறது. கைதி, மாஸ்டர் உள்ளிட்ட பல படங்களில் மிரட்டிய அர்ஜுன் தாஸ் தான் விடாமுயற்சி படத்தில் வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இருப்பினும் அவர் மெயின் வில்லன் இல்லை. முக்கிய வில்லனாக வேற்று மொழி பிரபலம் ஒருவருடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம்.

நடிகர் சஞ்சீவ் உடன் 6 மாசம் பேசாமல் இருந்த விஜய்! இந்த டிவி ஷோ தான் காரணம்